எதிர்வரும் 48மணி நேரத்தில் இலங்கை அரசியலில் நிகழப் போகும் அதிரடி மாற்றம்.!! தென்னிலங்கை ஊடகத்தின் பரபரப்புத் தகவல்.!!

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கைது செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால் சஜித் பிரேமதாஸவை கைது செய்வதற்கு நீண்ட திட்டமிடலுடன் செயற்படுவதாக முன்னாள் ஆளுநரை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கலாச்சார நிதியத்தின் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.கபே அமைப்பின் முன்னாள் பிரதானியான கீர்த்தி தென்னகோன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.எனினும், அடுத்து வரும் நாட்களில் எந்தவொரு அரசியல்வாதியையும் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கவில்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.