உலகெங்கிலும் உள்ள 7,000 பியானோ கலைஞர்கள் ஒன்றிணைந்து இணையத்தில் நடத்திய மாபெரும் இசை நிகழ்ச்சி…!!

கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச பரவல் காரணமாக மில்லியன் கணக்காக மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டன. இதன்காரணமாக பலர் மற்றவர்களுடன் இணைவதற்கும் இணையத்தில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் பல வழிகளை நாடினர். இந்நிலையில், சமீபத்தில், ஒரு செயலி நிறுவனம் (app company) உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள பியானோ கலைஞர்களை ‘யூ ரைஸ் மீ அப்’ (You Raise Me Up) என்ற ஆங்கில பாடலை இலவசமாகக் கற்றுக்கொள்ள அழைத்தது.அனைவரும் ஒன்றாக இணையத்தில் பியானோவை வாசித்து வீடியோவை பதிவு செய்த பிறகு இது உலகின் மிகப்பெரிய நேரடி இணைய கச்சேரியாக மாறியது என்று செயலியை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் வெறுமனே இசைக்கலைஞர்களை மட்டும் ஒன்றிணைக்க விரும்பவில்லை. அதில் நிறைய செய்யப்பட்டுள்ளது. இது மிகச் சிறந்தது. ஆனால் இது உண்மையில் மக்கள் கற்றுக் கொள்ள 30 நாட்கள் எடுத்தது” என்று குறித்த அமர்வின் தலைமை நிர்வாகி கிறிஸ் வான்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.52 நாடுகளைச் சேர்ந்த 7,000 க்கும் மேற்பட்டோர் வகுப்பில் பங்கேற்றனர், மேலும் கிட்டத்தட்ட 1,000 பேர் தங்கள் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை சமர்ப்பித்துள்ளனர்.

“இது தொற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுப்பட்டு கவனம் செலுத்த அனைவருக்கும் உதவியது” என்று வகுப்பில் பங்கேற்ற ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உற்பத்தி மேலாண்மை தொழிலாளி லென் டோசோயிஸ் தெரிவித்துள்ளார்.புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது எப்போதும் நல்லது, ஆனால் இந்த நிகழ்வில் அது தனித்துவமானது.”இதேபோன்று, இரு நடனக் கலைஞர்கள் 14 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 31 நடனக் கலைஞர்களுடன் ஒரு தொண்டு நிறுவன வீடியோ நிகழ்ச்சிக்காக இணையத்தில் இணைந்தனர். இது விரைவில் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.இந்த முயற்சியில் இருந்து திரட்டப்பட்ட பணம் பங்கேற்ற அனைத்து நடன நிறுவனங்களின் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கும் விநியோகிக்கப்பட்டது. இந்த நிதி மற்ற நடன அடிப்படையிலான நிவாரண நிதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளி :