இன்னும் இரு வாரங்களில் பிரித்தானியை தாக்கப் போகும் கொரோனா 2வது அலை..!! வெளிப்படையாக ஒத்துக் கொண்ட பிரதமர் ஜோன்ஸன்..!

இன்னும் 2 வாரங்களில் பிரித்தானியாவை கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும் நிலை உருவாகும் என்றும். தாம் மிகவும் அஞ்சுவதாக வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டுள்ளார் பிரதமர் பொறிஸ் ஜோன்சன். நேற்றைய தினம்(28) அவர் வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய நேரடிச் செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் விகிதம்16% ஆக இருந்தது என்றும்.நேற்று(28) அது சுமார் 28% விகிதம் உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கவலை வெளியிட்டுள்ளார்.இது 2வது கொரோனா அலை என்பதனை அவர் உறுதி செய்துள்ளார். இந்த கொரோனா பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர தாம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்களே அவதனமாக இருப்பது நல்லது.