மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து காணொளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆசிரியர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..!!

கொழும்பில் ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவர்களை துஸ்பிரயோகம் செய்து அதனை காணொளியாக பதிவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தமை விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் மாணவர்களின் ஆபாசக் காணொளிகளை எடுத்த ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியர் அமெரிக்கா, ஜேர்மன், ஸ்பெயின், மலேசியா உட்பட நாடுகளுக்கு மின்னஞ்சல் மற்றும் தபாலில் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்தக் காணொளிகளுக்காக 20 முதல் 30 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.​​இலங்கையில் சிறுவர்கள் ஓரினச்சேர்க்கை சேவைக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான சிறுவர்களின் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.பிரபல குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுவர்களை இலக்கு வைத்து பேஸ்புக் கணக்குகள் உட்பட இந்த சந்தேக நபர் அமைந்துள்ளார். மேலும், சிறுவர்களுக்கான திரைப்படக் கதையும் எழுதியுள்ளார் எனவும், அவவை மிகவும் பிரபலமானவை என தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண சிரேஷ் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபரின் பன்னிப்பிட்டிய வீட்டை சோதனையிடும் போது, வீடியோ காணொளிகள் அடங்கிய 130 சீடிகளும், சிறுவர்களின் உள்ளாடைகள் மற்றும் தலை முடிகள் 192 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.