யார் இந்த பவதாரணி ராஜசிங்கம்..? ஏன் நீங்கள் இவருக்கு வாக்களிக்க வேண்டும்.? இது காலத்தின் கட்டாயம்.!

கண்களை மூடி நாம் காணும் கனவுகள் கலைந்துவிடும். அவற்றின் ஆயுள் அற்பமானது. நிரந்தரமில்லாத ஒன்றின்முகவரி அது. ஆனால், நாம் விழித்தபடி கானும் கனவுகள் விதைகள். எம் எண்ணத்தில் முளைவிட்டு செயலில் வடிவம்பெறுபவை. “ உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு. இளைஞர்களே கனவு காணுங்கள் என்றார் அப்துல்கலாம் எனும் அறிஞன்! பல இளைஞர்களிற்கு வேதமாய் அமைந்த அந்த வார்த்தைகளே பவதாரணி ராஜசிங்கத்தின் சிந்தனையும் ஆகும்.”எறிவன யாவும் தெறிக்கக் கண்டேன்!
ஏற்றிய தீபம் ஜொலிக்கக் கண்டேன்..
கற்றவை யாவும் கசடறக் கண்டேன்..
கண்களைத் திறந்தே கனவு கண்டேன்..!
-பவதாரணி ராஜசிங்கம்

சமூகத்தின் பார்வைக்கு மாண்புறு மங்கையாக பரிணமிக்கும் பவதாரணி ராஜசிங்கம், தனது ஆரம்ப காலம் முதலே தான் பிறந்த மண்ணில் தான் காணும் அவலங்களையும், தன்சொந்த மக்கள் பிரச்சினைகளையும் கலைந்து தன்னிறைவான சமூகம் ஒன்றை உருவாக்கும் கனவை தனக்குள் சுமந்து வந்திருக்கிறார்.அக்கனவு இப்போது, அவரது அரசியல் பிரவேசம் மூலமாக புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சமூக விடயங்களில் இதுவரை தனியொரு பிரஜையாக தன்னால் இயன்றவரைக்கும் செயற்பட்டத்தைப் போல, இனிவரும் காலங்களில் யாழ். மற்றும் கிளிநொச்சி மக்களின் அனுமதியுடன், அவர்கள் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையேற்று அரசியல் சட்டதிட்டத்திற்கு அமைய தேசிய அளவிலான வளங்களைக்கொண்டு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வளம்மிக்க சமுதாயத்தையும், தன்னிறைவான வடக்கு மாகாணத்தையும் கட்டியெழுப்புவதே கண்களைத் திறந்துகொண்டு அவர் காணும் கனவாகும்.பவதாரணி ஆளுமைமிக்க பெண். தன் எழுத்தின் மூலம் மட்டுமல்ல செயலாற்றுதலிலும் தன்னை நிரூபித்துக்
கொண்டிருக்கும் இவர் அரசியலிலும் தன் முத்திரைகளை பதித்தே தீருவார். கண்களைத் திறந்து கனவு காணுங்கள் எனும் பவதாரணி ராஜசிங்கத்தின் நூலினூடாக வாழ்வியல் ஆய்வுப்பயணமே இக் கட்டுரை.

உலகம் தாய்வழி சமூகப்பண்பாட்டில் உதித்தது. ஆனால் அதி நர்கரீக வளர்ச்சி பெண்ணை பின்தள்ளிவிட்டது. அவள் மாபெரும் சக்தி.அக்கினிக் குஞ்சொன்று போதுமானது மூங்கில் காடுகளை முற்றிலும் வாரிக்கொள்ள. அக்கினிக்குநிகரானவள் பெண். அவள் தனித்துநிற்கும் போதே அவளது சக்தி அபரிமிதமானது. அவர்கள் ஒன்றபட்டால்,எழும் வீச்சின் வேகம் வரலாறு காணமுடியாத மாற்றங்களை வித்திட்டுச் செல்லும்.சமூக ஆர்வலராகவும் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இயங்கி வரும் பவதாரணி ராஜசிங்கம் அவர்கள், தனது சொந்த யாழ். மண்ணில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக களமிறங்கி உள்ளார்.ஆளுமைமிக்க பெண்மணியாக பல அங்கீகாரங்களைப் பெற்ற பவதாரணி அவர்கள், தன் ஆரம்பகாலக் கல்வியை யாழ்ப்பாணத்திலும், உயர்கல்வியை கொழும்பிலும் கற்றவராவார்.இவரது பெற்றோர் சிறுவயதில் அளித்த ஊக்கத்தையும், இவர் பெற்ற கல்வித்தகுதியையும், தன் குடும்பத்தினரின் ஆதரவினையும், வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களையும் கொண்டு இவர், தான் கண்ட கனவுகளை நனவாக்கும் சாதனைப் பெண்ணாக வெற்றிகரமான தொழில் தருனராக இன்று உயர்ந்திருக்கிறார்.யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சொந்த இடமாகக் கொண்டவர் பவதாரணி ராஜசிங்கம். மகேந்திரன் மற்றும் அரசராணி மகேந்திரனின் புதல்வியாக மிகவும் அன்பான மகளாக, திறமையான மாணவியாக, சமூகத்தின் மீது அக்கறையுள்ள நற்பிரஜையாக ஆரம்பத்திலிருந்தே வளர்ந்து வந்துள்ளார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரி, யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி, கொழும்பு திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் இவருக்கு அடித்தளம் இடப்பட்டது.
இவரது கணவரும் சிறந்த தகுதிவாய்ந்ததொரு முதன்மை நிறைவேற்று அதிகாரியாக நிறுவனமொன்றை நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் தன்னைச் சுற்றியிருக்கம் பெண்கள் குழாமையும் தன்னோடு சேர்த்து அணைத்து உயர்த்தும் பெண் ஆளுமை பவதாரணி. அதனைப் பறைசாற்றும் வகையில் அவரது நூலில் பலபிரதேசத்திலிருந்தம் பல குரல்கள் வரிவடிவாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கவிஞர்கள் வெறுமனே வார்த்தைகளை சோடிப்பவர்களல்ல. அவர்களின் எழுத்துக்கள் வாழ்வை மாற்றுபவை. கற்பனைகள், மட்டுமல்ல இயல்பையும் அழிந்து விடாமல் பத்திரப்படுத்தி உணர்வுகளை எழுத்தின் வழி கடத்துபவர்கள். அவர்களுக்கு வாழ்வியல் வலிகளும் தெரியும் அதனை உடைக்கும் வழிகளும் தெரியும் என்பதனை பவதராணியின் எழுத்துக்கள் இயம்புகின்றன.வர்த்தகத்துறைப் பட்டதாரியாக, CIMA சான்றிதழ் பெற்றவராக அவர் கற்ற கல்வியின் பலனை சரிவர பயன்படுத்தி சாதித்த ஒருவராக திகழ்கிறார் தாரணி ராஜசிங்கம்.

1993 இல் CIMA தகுதியுடன் உதவிக்கணக்காளராக தன்தொழில் உலகத்தில் காலடியெடுத்து வைத்த இவர்1995 இல் முகாமைத்துவ கணக்காளராக,1997இல் செயற்திட்ட அதிகாரியாக ,நிதிக் கட்டுப்பாட்டாளராக படிப்படியாக முன்னேறினார்.2003 இல் தன் சொந்த தயாரிப்புக்களுடன் வர்த்தகத்துறையில் காலடி எடுத்து வைத்தார். 2005 இல் Real estate துறையில் கால் பதித்தார். 2007 இல் கட்டட நிர்மாணத்துறையில் தடம்பதித்து வெற்றிகரமான வணிக இயக்குனரானார்.

இவ்வாறு வர்த்தகத்துறையில் சாதிக்கத் தொடங்கிய இவர் 2010 இல் Dekar Holings (pvt) எனும் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர், உணவுத்தயாரிப்புக்களில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட இவர் தரமான உள்ளூர் உணவு உற்பத்திகளை அடிப்படையாக கொண்ட நிறுவனமாக Arokya International (pvt) எனும் நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றிகண்டார்.ஒரு அரசியல்வாதி தன் வெற்றிக்கு என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை வரலாற்றின்வழி நாம் கண்டிருக்கிறோம். ஒரு சமூகத்தின் வெற்றி என்பது அதன் கல்வி மற்றும் அறிவியல் ரீதியாககட்டமைக்கப்படுவது. அந்த சமூகம் தன்னை சிந்தனை அடிப்படையில் சிறந்ததாய் நிலைகொள்ளச் செய்யும்போது இதுஇயல்பாய் தனக்கான தேவைகளை பெற்றுவிடும். நூல்கள் பிரபஞ்சத்தின் வழிகாட்டிகள். இந்த அடிப்படையில் இவரது நூலாக்கச் சிந்தனை வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி அவரை வரலாற்றுக்கு அடையாளப்படுத்திவிட்டது.பெண்களுக்காக பலரும் குரல் கொடுக்கலாம். ஆனால் ஒரு பெண் குரல் எழுவது வெற்றிக்கான வழி. இந்த நூல்தன்னம்பிக்கையின் குரல். தோற்றுவிடுவேனோ அல்லது தோற்கடிக்கப்பட்டுவிடுவேனோ என தயங்கி நிற்கும் பெண்களுக்கு உன்னால் முடியும், முன்னே வா என அழைப்பதுடன், நின்றுவிடாது, கரம் பற்றி அழைத்துச் சென்று கனவு இருக்கையில் அமரச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்துகின்றது.

ஒரு பெண்மொழி முட்கள் இல்லாத பாதையிலன்றி முள்ளிருந்தாலும் வானம் தூரமில்லை சேர்ந்தே தொடுவோம் வா எனஅழைத்து செல்கின்றது.கூர்ந்து பார் நீ காண நினைத்ததை கண்டடைவாய் என்பது சாத்தியமானதே. இந்த நாகரீக உலகில்தான் பெண் தனக்கான இடத்தைப் பெற முட்டி மோதிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கான இடம் மறுக்கப்பட்டு மறைக்கப்படுகின்றது.ஆனால்,செங்கோலாச்சிய காலத்திலே தம் எழுதுகோலினால் உலகை ஆண்ட மன்னர்களையும் ஆண்டவர்கள், ஆட்டுவித்தவர்கள்இந்தப் பெண்களே. அவர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பது இவரது கருத்து. காலம் மாறும் போது காட்சிகளும் மாறும். ஒரு மாற்றமே ஓயாத முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.