லங்காபுர பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று!

பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் 325 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுக்கு இலக்கானமை உறுதி செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.