யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமான மாணவி.!! கதறித் துடிக்கும் உறவுகள்.!

சிறுநீரகச் செயலிழப்பால் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியில் தரம்-11 இல் கல்வி கற்று வந்த மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஏழாலை பெரியதம்பிரான் ஆலய நிர்வாகசபை உறுப்பினர் மணிவண்ணன் அவர்களின் அன்பு மகள் லக்சிகா என்பவரே நேற்று முந்தினம் (28.07.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுநீரகம் செயலிழந்த நிலையில், அடுத்த மாதம் குறித்த மாணவிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதெனத் திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மாணவிக்கு கடந்த சனிக்கிழமை நோயின் தீவிரத்தன்மை அதிகரித்துள்ளது.இதனையடுத்து, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.இதனால், மாணவிக்கு மூளை நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்படி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.