யாழ். தங்கநகை வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 29) புதன்கிழமை தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளது.உலக அளவில் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்க விலை உயர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கோரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி, நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை: யாழ்ப்பாணத்தில் நேற்று (ஜூலை 29) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 95ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 94 ஆயிரத்து 400 ரூபாயாக காணப்பட்டது.தூய தங்கத்தின் விலை:24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தூய தங்கம் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.