வெளிநாட்டிலிருந்து திரும்பிய யாழ் வாசி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!

வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய நபர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுணாவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான தங்கராசா சந்துரு என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்து தற்சமயம் நாடு திரும்பியவர் எனவும், கொரோனா காரணமாக மீளவும் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் சொந்த ஊரில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.