கொரோனா மரணங்கள் குறைந்த நாடாகப் பதிவான இலங்கை…!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை கருத்திற் கொள்ளும் போது இலங்கை மரணங்கள் குறைவான நாடாக பதிவாகியுள்ளது. இதுவரையில் இலங்கையில் 190 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 7 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது.அதற்கமைய ஏற்பட்ட மரணங்களுக்கமைய அது நூற்றுக்கு 3.6 வீதமாகும். அது இதுவரையில் உலகளவில் மரணங்கள் பதிவாகிய நாடுகளில் மிகக்குறைந்த வீதமாகும்.

இத்தாலியில் கொரோனா மரணங்களை ஒப்பிடும் போது அதன் எண்ணிக்கை நூற்றுக்கு 12.7 வீதமாகும். பிரான்ஸில் 10.3 வீதமாக மரணங்கள் பதிவாகியுள்ளது.இலங்கை இதுவரையில் 190 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.