வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதிலை உடைத்து வீழ்த்திய கார்..!! இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!!

யாழ்.அராலிப் பகுதியில் காருடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த வரதராசா நிதுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம்யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.காரானது குறித்த இளைஞனை மோதிவிட்டு வீதியை விட்டு வெளியே பாய்ந்து சுமார் 25 அடிகள் தூரத்திற்கு மதிலை இடித்து தகர்த்துள்ளது. காரின் சாரதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் எனப் பொலிஸார் கூறுகின்றனர்.