33 கிலோ கஞ்சாவுடன் யாழில் சிக்கிய இளைஞன்..!!

யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியில் 33 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த, கஞ்சா பொதிகளுடன் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.