உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்காக அதிகரிக்க வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மோதுமாம்..!!

வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று உணவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக பலரும் போராடி வருகின்றன.ஒருபுறம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்ட நிலையிலும் எப்போது இயல்பு நிலை திரும்புமோ என்ற ஏக்கம் அனைவருக்குள்ளும் எழுந்துதான் உள்ளது.

ஆனால், இந்த கொரோனாவால் சில நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வருவது, வீட்டிலேயே பெரும்பாலும் உணவுகளை சமைத்து சாப்பிடுவது என்று மாறியுள்ளது.தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர்.இதனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வழக்கமாக வெற்றிலையை கசாயம் காய்ச்சி குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து 10 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்ற கருத்து தற்போது தீயாய் பரவி வருகின்றது.உணவியல் நிபுணர் ஒருவரும் வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து 4 வயதுக்கு மேற்பட்டோர் சாப்பிடலாம், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.