எந்த திகதியில் பிறந்தவரை நீங்கள் திருமணம் முடித்தால் உங்களுக்கு நல்லது..? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்…

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் தான் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது நாள், நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் பார்க்கின்றனர். அதைவிட, உங்கள் பிறந்தநாளுக்கு எந்த திகதியில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கை வளமாக இருக்கும் என்றே ஒரு கணக்கு இருக்கிறது.அதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1,10,19,28:இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 3,4,5,6,8 எண்களில் பிறந்தோரை மணம் முடிக்கலாம். ஒன்றாம் எண்ணை மட்டும் இவர்கள் தவிர்ப்பது நல்லது. காரணம் 1ம் எண் சூரியன் அதிபதி. இதனால், தம்பதிக்குள் ஈகோ யுத்தம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.2,11,20,29:இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு 1,3,5,6 ம் எண்களில் பிறந்தவர்கள் ஏற்றவர்கள்.இந்த தேதிகளில் பிறந்தோருக்கு 7ம் தேதி பிறந்த பெண் மிகவும் ஏற்றவள். இவர்கள் 8,9ம் தேதி பிறந்த பெண்களை எக்காரணம் கொண்டும் திருமணமே செய்துவிடக் கூடாது. பின்னர் வாழ்க்கை சர்வநாசம் ஆகிவிடும்.3,12,21,30: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 3,9 ஆகிய எண்களில் பிறந்தோரை மணமுடித்தால் வாழ்வு இனிமையாக இருக்கும். இதேபோல் 2ம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்து கொள்ளலாம்.இவர்கள் நல்லமுறையில் அனுசரித்து செல்வார்கள்.4,13,22,31:இந்த தேதியில் பிறந்தவர்கள் 1,9 ஆகிய தேதிகளில் பிறந்தோரை மணந்தால் வாழ்வு மனம் வீசும். 5,6ம் எண்ணில் பிறந்தோரையும் மணக்கலாம்.5,14,23:இவர்கள் காதலில் ஈடுபடும் வாய்ப்பே அதிகம். இவர்கள் 1,3,6 எண்களில் பிறந்தவர்களையும் மணக்கலாம். 2,6 எண்களில் பிறந்தோரை மணம் முடித்தால் விரைவில் குழந்தைப் பாக்கியம் கிட்டும்.

6,15,24:இந்த தேதியில் பிறந்த ஆண்கள் 6,9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறக்கும். இவர்கள் 1,3,4,5ம் தேதி பிறந்தோரை தவிர்த்தல் நல்லது.7,16,25:இவர்கள் 1,2,5,6 ஆகிய எண்களில் பிறந்தோரை திருமணம் செய்யலாம். அப்படி செய்யும் போது இல்வாழ்க்கை சிறக்கும்.8,17,26:இந்த தேதியில் பிறந்தவர்கள் 1,4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யலாம். 9ம் தேதி பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள்வார்கள். ஆக, அதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.9,18,27:இவர்கள் 3,5,6,9 ஆகிய எண்ணில் பிறந்தோரை மணம் முடிக்கலாம். இந்த தேதியில் பிறந்தோர் தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் உடையவராகவும், ஆண் குழந்தை பிறக்கும் தன்மை உடையவராகவும் இருப்பார்கள்.அப்புறமென்ன உங்க பிறந்ததேதியையும், உங்களுக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணு பிறந்த தேதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்..