பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு..!!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் தரம் 1 முதல் தரம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீளத் திறக்கப்படவுள்ளது.எனவே, பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகள் அனைத்து அரச பாடசாலைகளும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன் பின்னர் ஓகஸ்ட் 10 ஆம் திகதி அனைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதேவேளை, கடந்த 27ஆம் திகதி தொடக்கம் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.