இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை இல்லை.!! அதிர வைக்கும் புள்ளி விபரங்கள்.!!

இலங்கையில் 480,000ற்க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொவிட்-19 தொற்றுநோயால் வேலையை இழந்த நபர்களின் எண்ணிக்கையை அறிய கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.உற்பத்தி, வருமானம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்கள் குறித்தும் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் கவனம் செலுத்தும்.கணக்கெடுப்பை ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், செப்டெம்பர் மாதத்திற்குள் அது பகிரங்கப்படுத்தப்படவும் உள்ளது.2020 ஆம் ஆண்டிற்கான வேலையின்மை குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே, இலங்கையில் தற்போது சுமார் 480,000 நபர்கள் வேலையில்லாமல் உள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.