மாவட்டச் செயலகத்தில் கஞ்சா விற்ற உத்தியோகஸ்தர்.!! அலுவலக அறைக்குள் கஞ்சா ஸ்டோர்..!!

இரத்தினபுரி மாவட்டச் செயலக வளாகத்தில்(கச்சேரி) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.நீண்ட காலமாக மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.