அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…யாழ் வருகிறார் இரா.சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் பிரச்சாரங்களிற்காக யாழ்ப்பாணம் வருகிறார்.எதிர்வரும் 1ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மாவை சேனாதிராசாவை ஆதரித்தும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்தும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.