கொரோனாவின் எதிரொலி…..திருமணம் செய்யவும் விவகாரத்துப் பெறவும் உடனடித் தடை விதித்த நாடு..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் டுபாய் அரசு, மறு அறிவித்தல் வரை தனது நாட்டு குடிமக்களின் திருமணம் மற்றும் விவாகரத்துக்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை டுபாய் நீதித்துறை இந்த அறிவிப்பை விடுத்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டை லொக் டவுன் செய்துள்ள நிலையில், அரசு இந்த புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. லொக் டவுன் காலம் முடியும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென கருதப்படுகிறது.இதன்படி, மறுஅறிவித்தல் வரை டுபாயில் யாரும் சட்டரீதியாக திருமணம் செய்யவோ, விவாகரத்து பெறவோ முடியாது.

ஏற்கனவே திருமணத்தின் சட்ட ஏற்பாடுகளை முடித்த தம்பதிகள் திருமண விருந்துகளை தமது நெருக்கமான வட்டாரங்களில் கூட ஏற்பாடு செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக குடும்ப நீதிமன்ற நீதிபதி கலீத் அல்-ஹவ்ஸ்னி கூறினார்.டுபாயில் கொரோனா தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.