கொழும்பு கடவுச்சீட்டு அலுவலகத்தில் கொரோனா நோயுடன் சிக்கிய இரு தமிழர்கள்..!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவுச்சீட்டு திணைக்களத்திற்கு சென்ற இருவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த கொரோனா தொற்றாளர்கள் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில், தங்கள் கடவுச்சீட்டினை புதுபிப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்துள்ள சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினால் கொஸ்கொட தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவில் இருந்து கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த இருவரும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.கொரோனா தொற்றுக்குள்ளான அவர்கள் இருவரும் ராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24ஆம் திகதி தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் சுயதனினமைப்படுத்தலுக்காக அவர்கள் கிளிநொச்சி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் இருவரும் தங்கள் விமான கடவுச்சீட்டினை புதுப்பிப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கயை அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.