கிளிநொச்சியில் அதிரடித் தேடுதல்..ஒரு தொகை கஞ்சா மற்றும் பெரும் தொகைப் பணத்துடன் இருவர் பொலிஸாரால் கைது..!!

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று (27) முற்பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலீஸார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரும் செல்வாநகரை சேர்ந்த ஒருவருமாக இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்தே மேற்படி பணம் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.