இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று…!!

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2804 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சேனாபுர புனர்வாழ்வு மையத்தின் 17 கைதிகள் மற்றும் கட்டாரில் இருந்து திரும்பி நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஐந்து பேருக்கே இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 672 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரையில், 2121 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.இதேவேளை, 11 பேர் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.