உலக வாழ் மக்களுக்கு முக்கிய செய்தி….அமெரிக்காவில் மீண்டும் டெனால்ட் ட்ரம்ப் ஆட்சியே..!! பிந்திய கருத்துக் கணிப்பில் வெளியான பகீர் தகவல்..!!

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது.ஆனால், மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால், டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார்.தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.