வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றுமொரு ஒரு கைதிக்கும் கொரோனா..!!

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளது.கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் பழகியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளதென கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.நேற்றையதினம் இலங்கையில் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இது வரையில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 580ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
– tamilwin.com