புலம்பெயர் தேசத்தில் திடீரென மாயமான தமிழ் இளைஞன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்..!!

கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி அறிக்கையை ரொரன்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அரூரன் ஸ்ரீதரன் என்ற 28 வயது இளைஞன் கடந்த 23ஆம் திகதி பகல் 12 மணிக்கு மாயமானார்.அவர் கடைசியாக Port Union Road and Lawrence Avenue East பகுதியில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இதோடு அவரின் உடல்வாகு குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் அரூரன் ஸ்ரீதரன் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தங்கள் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.மேலும், அரூரன் ஸ்ரீதரன் தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி என பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.