ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளம் பெண்ணின் வங்கிக் கணக்கைப் பார்த்து அதிர்ந்து போன பொலிஸார்.!!

1.6 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு மட்டக்குளி சமித்புர பகுதியில் கைது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய வங்கி கணக்கில் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பணம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய இருந்தவர்களால் மாற்றப்பட்ட பணமாக இருக்கும் எனப் பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.