இலங்கை அரசாங்க சேவையில் வரப் போகும் மாற்றம்..? விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை..!!

இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவைப் பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால், இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்குமாறு வேறு சேவை பிரிவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தக் கோரிக்கையை செயற்படுத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.