இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை வேகமாக உயர்வு…!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,121 ஆக உயர்வடைந்துள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,782 ஆகவும், 650 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.இதேவேளை, 80 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.