உருக்குலைந்த நிலையில் மன்னார் கடற்கரையில் ஆணின் சடலம்..!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சடலத்தை அவதானித்துள்ளனர்.கடற்படையினர் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.