பொதுத் தேர்தல் விளம்பரங்களுக்காக கோடி கோடியாக அள்ளிவீசும் வேட்பாளர்கள்….இலங்கை மக்களை அதிர வைத்த தகவல்..!!

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் இதுவரையில் தமது சமூக ஊடக விளம்பரங்களுக்காக 2லட்சத்து 34ஆயிரத்து 692 டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் உட்பட்ட சமூக ஊடகங்களுக்கே இந்த செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வேட்பாளர்களால் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள 18ஆயிரத்து 860 தேர்தல் விளம்பரங்கள் தொடர்பிலேயே இந்த தகவல்கள் சமூக ஊடகங்களின் விளம்பர நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில், கடந்த ஜூலை 5ஆம் திகதிக்கு பின்னர் 4808 சமூக ஊடக விளம்பரங்களுக்காக 60ஆயிரம் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.இது இரண்டு வாரக்காலப்பகுதியில் ஏற்பட்ட 291வீத அதிகரித்த செலவீனமாக கருதப்படுகிறது. இந்த விளம்பரங்கள் யாவும் அரசியல், சமூக பிரச்சனைகள் மற்றும் தேர்தலை மையமாக கொண்டு அமைந்துள்ளன.சமூக ஊடக விளம்பரங்களில் அதிகமானவை மேல்மாகாணத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன.அங்கு சமூக ஊடக விளம்பரங்களுக்காக இதுவரை 1லட்சத்து 6 ஆயிரத்து 804 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. வடமத்திய மாகாணத்தில் இருந்தே ஆகக்குறைந்த 4745 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல் கண்காணிப்பு மையங்கனின் மதிப்பின்படி இதுவரை தேர்தலுக்கான விளம்பரங்களுக்காக கட்சிகள் 514 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளன.இது வரும் ஒரு வாரக்காலத்திலும் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.