இன்று முதல் மீண்டும் ஆரம்பித்த பாடசாலைகள்.!

இரண்டு வார இடைவெளியின் பின்னர் இன்று மீளவும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றது.

11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மட்டுமே இன்று முதல் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.காலை 07.30 மணி முதல் மாலை 03.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.