9 வருடங்களின் பின்னர் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.


2011ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வார இறுதியில் 1900 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய தங்க கொள்வனவாளர்களை கொண்டாக நாடாக இந்தியா உள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் தங்க கொள்வனவு நூற்றுக்கு 30 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.