இலங்கையில் 1800 மில்லியன் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வங்கிக் கணக்கு.!! ஆறு பேர் அதிரடியாகக் கைது.!!

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாவுடன் வங்கி கணக்கு ஒன்றை பேணிவந்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலை அடுத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரது கையில் இருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதை பொருள் விற்பனையாளர்களில் பிரதானியை கைது செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பு கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இந்த வலையமைப்பின் முக்கிய பிரதானி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.