யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் பரப்புரைக் கூட்டம் மீது காடையர்கள் குழு தாக்குதல்..!!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் இமானுவேல் ஆனல்ட் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் கற்கள், மற்றும் போத்தல்களை கொண்டு காடையர் குழு ஓன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ்.சுழிபுரம்- கல்விளான் பகுதியில் இன்று இரவு பிரச்சார கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் மக்களுடன் மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த காடையர்கள் சிலர் திடீரென கற்கள், போத்தல்களால் எறிந்து தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இமானுவேல் ஆனல்ட் உட்பட எவருக்கும் எந்தவொரு ஆபத்தும் உண்டாகவில்லை. இந்நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் துரத்தி சென்றுள்ளனர். எனினும், அவர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், குறித்த காடையர்கள் அயல் கிராமத்தை சேர்ந்த மற்றொரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என மக்கள் கூறியிருக்கின்றனர்.