இலங்கைக்கு மீண்டும் ஆப்பு வைத்த ஐரோப்பிய ஒன்றியம்.!! இரண்டாவது தடவையாக மீண்டும் தடை..!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையர்கள் நுழைவதற்கு இரண்டாவது தடவையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய கூடிய நாடுகளின் பட்டியல் ஒன்று இரண்டாவது முறையாகவும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அந்த நாடுகளின் பட்டியலில் இம்முறையும் இலங்கை இணைத்துக் கொள்ளப்படவில்லை.கடந்த 30ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட முதலாவது பட்டியலிலும் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் தங்கள் விமான நிலையங்களை மூடியிருந்தன.எனினும், தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் சில நாடுகள் விமான நிலையங்களை திறந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இந்நி்லையில், ஐரோப்பிய நாடுகளுக்குள் வருகை தரக்கூடிய ஏனைய நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.