இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

இலங்கையில் மேலும் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள ஒன்பது கைதிகளுக்கும் கந்தகாடு மத்திய நிலையத்தில் தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய ஒருவருக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை இரண்டாயிரத்து 94 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தற்போது 658 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பதுடன் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.