மதம் மாற மறுத்த கள்ளக்காதலியை கொலை செய்து நடுவீட்டில் புதைத்த கொடூரக் காதலன்.!!

முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டாராம்.. அதனால், அந்த ஆத்திரத்தில் காதலியை கொன்று புதைத்துவிட்டு, அந்த பிணத்தின் மேலேயே ஒருத்தர் பல மாசம் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் தூக்கி வாரி போட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் என்ற பகுதி உள்ளது… இங்கு வசித்து வந்த இஸ்லாமிய இளைஞர் பெயர் ஷம்சாத்.. இவருக்கு கல்யாணம் ஆகி, டைவர்ஸும் ஆகிவிட்டது. இதனிடையே ஒரு இந்து பெண்ணோடு கள்ளக்காதல் வைத்து கொண்டார்.. 4 வருஷம் ஒன்றாகவே 2 பேரும் வாழ்ந்துள்ளனர்.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. 10 வயசில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள்.. இந்த கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து வாழ்ந்து கொண்டு வந்துள்ளது.. அந்த குழந்தையும் இவர்களுடன்தான் இருந்திருக்கிறாள்.

இந்நிலையில் ஷம்ஷத், தன் கள்ளக்காதலியை முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி வந்தார்.. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்து போயுள்ளது. கடந்த மார்ச் மாதம் இப்படி ஒரு தகராறு வெடித்து, அந்தப் பெண்ணை ஷம்ஷத் கொன்றே விட்டார்.அவரைதான் கொன்றார் என்றால், அந்த 10 வயது குழந்தையையும் சேர்த்து கொன்றுவிட்டார்.. 2 சடலத்தையும் தன் வீட்டு ஹாலிலேயே புதைத்து விட்டார்.. அந்த சடலம் மேலதான் கடந்த 4 மாசமாக நடமாடியும், வாழ்ந்தும் வந்துள்ளார்.

இந்த சமயத்தில்தான், இறந்த அந்த பெண்ணின் தோழிக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தாயும், மகளையும் காணோம் என்று குழப்பத்திலேயே இருந்துள்ளார்.பிறகு அதே பகுதியில் இருந்த ஸ்டேஷனில் தோழியை காணோம் என்று புகாரும் தந்தார்.. அப்போதுதான் ஷம்சாத் வசமாகச் சிக்கியுள்ளார்.