வடக்கின் புதிய ஆளுனர் பதவிக்கு முன்னாள் இராணுவத் தளபதி..?

வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வன்னி ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியாகவும் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா கடமையாற்றியுள்ளார்.தற்போது வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்ஸ் பொறுப்பிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.