பொலிஸாரிடம் வசமாக சிக்கினார் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி..!!

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரைத் தேடி 06 சிறப்பு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்தன.

கந்தக்காடு போதைப்பொருள் மையத்தில் சிகிச்சை பெற்று வந்து திருகோணமலையை சேர்ந்த 41 வயதான மொஹமட் ஹசீம் மொஹமட் நசீம் என்பவரே தப்பிச் சென்றார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதி இன்று அதிகாலை 3.00 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இராணுவப்புலனாய்வு பிரிவும் அவரை தேடி களமிறக்கப்பட்டிருந்தது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு அருகில், இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது இராணுவப்புலனாய்வு பிரிவினரின் காவலில் உள்ளார், விரைவில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.