இலங்கையர்களை திருமணம்செய்ய ஆர்வம் காட்டும் ஜப்பானியர்கள்…!!

ஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கமான கலாச்சார சமநிலை காரணமாக, ஜப்பானியர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக கார்டின் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான மியகோ தகசு தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஜப்பானியர்களை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், ஜப்பான் – இலங்கை திருமண சேவையை ஆரம்பிக்க தமது நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.ஜப்பானில் உள்ள பிரைடல் எலலைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கார்டின் மெரேஜ் நிறுவனம் டோக்கியோவில் இயங்கி வருகின்றது.