நாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…ஒரேயொரு புதிய கொரோனா தொற்றாளர் மாத்திரம் அடையாளம்.!!

நாட்டில் நேற்றைய தினம் ஒரேயொரு புதிய கொரோனா தெற்றாளர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இவ்வாறு நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.நாட்டின் தற்போதைய மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,753 ஆகவுள்ளது.அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,077 ஆக உயர்வடைந்துள்ளது.இவ்வாறு நேற்றைய தினம் குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஆறு பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.

தற்போது வைத்தியசாலையில் மொத்தமாக 665 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தின்பேரில் 101 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.இதுவரை கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திலிருந்து 25,794 நபர்கள் இதுவரை அவர்களது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவுசெய்துள்ளனர். 4,535 பேர் அதேநேரம் 4,535 நபர்கள் முத்தரப்பு படைகளால் பராமரிக்கப்படும் 44 நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நேற்று வரை மொத்தமாக 145,373 சோதனைகளுடன் 1,380 பி.சி.ஆர் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும் மையம் தெரிவித்துள்ளது.