தபால்மூல வாக்காளர்களிற்கு இன்றும், நாளையும் சந்தர்ப்பம்!

தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 04.00 மணி வரையும், நாளை காலை 08.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையிலும் இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதுவரை தபால் வாக்களிக்கத் தவறிய தபால் வாக்காளர்கள் தங்களது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்கலாம்.