கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி! பொலிஸாரின் அவசர கோரிக்கை!!

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமை மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளதுசந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.குறித்த நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.