தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசாங்கம் வழங்கும் விசேட நிவாரணம்.!

கொரோனா வைரஸ் காரணமாக வருமானத்தை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவியை தொகையை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


நிரந்தர வருமானம் இல்லாத நபர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி சாதமான பதிலை வழங்கியதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கிருமி நாசினி குடிலை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.