இரட்டைக்குழந்தைகளுடன் கர்ப்பமான இரண்டாவது மனைவி..!! மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்த கொடூரக் கணவன்..!!

தமிழகத்தில் 2வது மனைவியை கணவன் கொலை செய்த வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (31). இவருக்கும் ரமணி (35) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.ராஜ்குமாருக்கு ரமணி இரண்டாவது மனைவி ஆவார், சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமான ரமணிக்கு திடீரென கர்ப்பம் கலைந்துள்ளது.இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கால் சார்லஸுக்கு வேலை இல்லை. அதனால், வருமானம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார்.ரமணியின் நடத்தையில் சார்லஸ் அடிக்கடி சந்தேகமடைந்து அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ரமணி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கிடந்த சார்லஸ், தன்னை விட்டு சென்ற மனைவியை கொல்ல முடிவெடுத்தார்.அதன்படி வீட்டுக்கு ரமணியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த சார்லஸ் ரமணியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு தலைமறைவாக இருந்த சார்லஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிசார் கூறுகையில், சார்லஸ் வாட்ச்மேனாக வேலை செய்கிறார், அவருக்கு ஏற்கனவே பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி 1 குழந்தையும் பிறந்துள்ளது. பவித்ரா மீதும் சார்லஸ் சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டதால் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகுதான் 2-வதாக ரமணியைத் திருமணம் செய்துள்ளார் சார்லஸ்.

ரமணியின் நடத்தையிலும் சார்லஸ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ரமணியின் சகோதரரின் நண்பனிடம் ரமணி பேசுவதை தவறாகக் கருதியுள்ளார்.ரமணியின் கர்ப்பம் கலைந்ததற்குகூட அவர் மீது சார்லஸ் சந்தேகப்பட்டுள்ளார். இதன் பின்னரே மனைவியை கொன்றுள்ளார்.மேலும், சார்லஸ் மீது 2017ல் விபச்சார ப்ரோக்கராக இருந்து அவர் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என பொலிசார் கூறியுள்ளனர்.