நாய்களினால் இளம் பெண்ணுக்கு நடந்த விசித்திர மரணம்.!! மரணம் இப்படியும் வருமா..?

பிரித்தானியாவில் இரண்டு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டை இறுக்க உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை சிறுமி ஒருத்தி பார்த்திருக்கிறாள்.வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் விழுந்து கிடந்த அந்த பெண்ணைக்கண்டதும், அருகில் வேலை செய்துகொண்டிருந்த இருவரிடம் ஓடோடிச்சென்று உதவி கோரியுள்ளாள் அந்த சிறுமி.Deborah Mary Roberts (47) என்ற அந்த பெண்ணைக்கண்டதும் மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார்கள் அந்த இருவரும்.ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வந்து எவ்வளவோ முயன்றும் Deborahவைக் காப்பாற்ற முடியவில்லை.என்ன நடந்ததென்றால், இரண்டு நாய்களை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுள்ளார் Deborah.எப்படியோ நாய்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு Deborahவின் கழுத்தில் சுற்றியுள்ளது.அப்போது இரண்டு நாய்களும் ஆளுக்கொரு பக்கம் இழுக்க, கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்திருக்கிறார் Deborah. இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.