நல்லை ஆதீன குரு முதல்வருடனான சந்திப்பிலும் ஏனைய கூட்டமைப்பு கட்சிகளை ஓரம் கட்டி தனியாகச் சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள்..!!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நல்லை ஆதீனத்தை சந்திப்பார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், ஏனைய கட்சிகளிற்கு தகவல் அளிக்காமல், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் தமிழ் அரசு கட்சி வேட்பாளர்களான ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்