தன்னைத் தானே சுட்ட இராணுவச் சிப்பாய்…ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!!

அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடமையில் இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.