ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்..!

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னதாக, 01/01/2016 க்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி கிடைத்தது.எனினும் புதிய முடிவின்படி, அந்த திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அக்ரஹாரா சலுகைகள் கிடைக்கவுள்ளன.