யாழில் கோயிலுக்குள் மின்னல் வேகத்தில் புகுந்த டிப்பர் கோர விபத்து..!! இருவரின் கதி…?

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்ததால், ஆலயக் கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்.நாவற்குழி தச்சன்தோப்பு சந்திக்கருகில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயுமே படுகாயமடைந்துள்ளனர். டிப்பர் மோதியதன் காரணமாக தெருவடிப் பிள்ளையார் ஆலய கட்டடம் பகுதியளவில் பலத்த சேதமடைந்துள்ளது.காயமடைந்தவர்கள் அவரச நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.